13/1/13

ரிசானா மரணமும் இலங்கையின் உண்மை நிலவரமும் தெளிவான மார்க்க விளக்கம்.(வீடியோ)






ரிசானாக்கள் ஏன் உருவாகிறார்கள்? அதை தடுக்க என்ன வழி என்றும் சில விளக்கங்கள் வீடியோ வின் இறுதியில் சொல்லப்படுகிறது.



10/1/13

ரிசானா நஃபீக் - எதிர்ப்பார்க்காத துயரம்....

இலங்கையின் கிழக்கில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூரில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற ரிஸானா  நபீக் என்ற இளம்பெண் கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது.

மிக சமீபத்தில்தான் பி பி சி யில் அவரை காப்பாற்ற இறுதி வரை போராடுவோம் என்று அவருக்காக போராடும் இலங்கையை சேர்ந்த டாக்டர் ஹிபாய பெட்டி அளித்திருந்தார். இங்கு வளைகுடாவிலும் இலங்கையிலும் லட்சக்கணக்கான மக்கள் அவரின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்கள்,ஆனால் நேற்று முன்தினம் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி அறிந்ததும் மனம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.

முடிந்து போன விசயமாகிவிட்ட இந்த மரணம் கடந்த பத்து ஆண்டுகளாக இங்கு வளைகுடாவில் வாழ்வதாலும் இங்குள்ள நிலைமைகளை ஓரளவு தெரிந்து வைத்திருப்பதாலும் எனக்கு மட்டும் மனது உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஒரு பக்கம் சம்பவம் நடந்த போது  ரிசானா பதினேழு வயது ஆன  சிறுமி என்றும்,இலங்கை அரசு அவரை காப்பாற்ற முயற்சிக்க வில்லை என்றும்,பல தரப்பிலும் பல்வேறு குற்ற சாட்டுகள்,விவாதங்கள் நடக்கிறது.


ரிசானா குடும்பம் 
ரிஸானா  வின் பொறுப்பில் விடப்பட்ட நான்கு மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை அறிவிக்கப்பட்டு கடந்த 2005 முதல் சிறையில் இருந்தார் ரிஸானா, விசாரணையின் போது குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிஉ மன்றில் சமர்பிக்கவில்லை என்றும் சொல்ல படுகிறது தண்டனை நிறைவேற்றப்படும் அவர் பெற்றோருடன்  பேசவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ரிசானா வீடு 

எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இங்குள்ள அரபியர்களின் வாழ்க்கை முறை ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக்கொண்டே வருகிறது அதாவது  மிக மிக மோசமாகிக்கொண்டே வருகிறது என்றும் சொல்லலாம்.

வியர்வை காய்வதற்கு முன் உழைத்தவனுக்கு ஊதியம் தர வேண்டும் என்ற உயர்ந்த நபி மொழியை பின்பற்றும் அரபியரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வீட்டு பணிப்பெண்களை பாலியல் கொடுமைகுள்ளாகும் போக்கு அதிகமாக இருக்கிறது. இந்தோனேசிய நாட்டு பெண்களை இனி வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தடுத்துள்ளது கூட இந்த காரணத்துக்காகத்தான்.

மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஒரு மரியாதை நம்மவர்களுக்கு ஒரு மரியாதை என்று மனிதனை தரம் பிரித்து பார்க்கும் நிலைமை இங்கு அதிகமாகவே இருக்கிறது.இதை இங்கு நீண்ட காலமாக வசிப்பவர்கள் நன்கு அறிவர்.

ரிஸானா  செய்த குற்றத்தை ஒரு அமெரிக்கரோ அல்லது பிரித்தானியரோ செய்து இருந்தால் கண்டிப்பாக அவருக்கு மரண தண்டனை வழங்க பட்டிருக்க மாட்டாது.

இவர்கள் செய்யும் அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல ஆனால் அதற்கெல்லாம் சரியான விசாரணையும் தண்டனையும் கிடைப்பதே இல்லை என்பது இங்கு சில காலம் வாழ்ந்து பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும்.

இரண்டு ஆண்டுகள்ளுக்கு முன்பு இலங்கையை சேர்ந்த பணிப்பெண்ணின் உடலில் 24 ஆணிகளை ஏற்றி கொடுமை செய்தவர்கலுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்று தெரியவில்லை.

அராபிய பெண்களை பாதுக்காப்பாக வைப்பவர்கள் எங்கள் நாட்டு பெண்களை பாலியல் தொல்லை படுத்துவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

உலகம் முழுக்க இஸ்லாத்தை எடுத்து சென்ற அரபியர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார்கள் அதாவது பெயரளவு முஸ்லிம்களாக மாறுகிறார்கள்.இது மறுக்க முடியாத உண்மை. இல்லை என்று வாதாடுபவர்களுக்கு இங்கு நீண்ட காலமாக தங்கி வேலை செய்பவர்கள் சொல்லும் ஆயிரம் கதைகளே சாட்சி.


நூறு சதவீதம் நீதியாக நடப்பவர்கள் ரிஸானா விற்கு மரண தண்டனை வழங்கி இருந்தால் அது பெரிய விஷயமில்லை. ஆனால் கண்ணுக்கு முன் இவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு சரியான நீதி இல்லாத போது  ஒரு ஏழை பெண்ணுக்கு இவ்வளவு அவசரமாக தண்டனை வழங்கியது ஜீரணிக்க முடியாத விஷயமாக இருக்கிறது.

இஸ்லாமிய சட்டம் பெரும்பாலும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குதான்  பயன்படுத்த படுகிறது.இவர்களுக்கு  இல்லை.இவர்கள் செய்யும் பல குற்றங்கள் இவர்களுக்குள்ளேயே பேசி முடிக்கப்படுகிறது.வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது.இதெல்லாம் வாஸ்தா என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தவர்களுக்கு  நன்கு தெரியும்.

ரிஸானா விசயத்தில் சம்பவம் நடந்த பொது அவர் பதினேழு வயது சிறுமி,அவருக்காக வாதாட வழக்கறிஞர் இல்லை,அரபி மொழியை சரியாக பேச தெரியாத அவர் அளித்த வாக்குமூலம் எப்படி இருக்கும் என்று அறிவுள்ளவர்களுக்கு விளங்கும்,இலங்கை அரசு சரியான முறையில் இந்த விசயத்தை அணுகவில்லை,குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் நீதிமன்றில் சமர்பிக்கவில்லை.அந்த ரிப்போர்ட்டில் ரிசானாவின் கை ரேகைகள் குழந்தையின் கழுத்தில் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

எது எப்பிடி இருந்தாலும் தவறு யார் மீது என்று இறைவனுக்கு மட்டுமே தெளிவாக தெரியும்.ஆனாலும் வாய்ப்பு இருந்தும் ஒரு ஏழைப்பெண்ணின் உயிர் காப்பாற்றப் படவில்லை என்பது மனதுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கீழே சில இணைப்புகள் இருக்கிறது அவற்றை சொடுக்கி பாருங்கள்.அவைகள் எல்லாம் சில உதாரணங்களே.


http://www.bbc.co.uk/news/world-south-asia-14190470


http://www.bbc.co.uk/news/world-south-asia-11109726


http://news.bbc.co.uk/2/hi/middle_east/7415290.stm