16/10/12

குளிர்காலமும் கூட வரும் ச(ளி)னியும்...பாதுக்காப்பது எப்படி...???

மத்தியக்கிழக்கு அரபு நாடுகளில் இந்த மாதத்தோடு கடும் வெயில் முடிந்து கடும் குளிர் காலம் வரப்போவதால் இந்த நேரத்தில் இங்குள்ள நம்மை போன்றவர்களுக்கு வரும் முக்கியமான பிரச்சினை சளி,ஜலதோஷம்,மூக்கடைப்பு,தொண்டை வலி,மூக்கில் நீர் வடிதல் போன்றவைதான்.சிலருக்கு காய்ச்சல் கூட வந்து பாடாய் படுத்தும்.


குளிர் காலம் வந்தாலே இங்குள்ள மருத்துவமனைகளை 24 மணி நேரமும் இது போன்ற பிரச்சினைகளுக்கு தான் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆரம்பத்தில் நானும் இப்படித்தானானால் எந்த மருந்து மாத்திரைக்கும் இது முழுமையாக குணமாவது இல்லை.தற்காலிக நிவாரணம்தான்.

தேவை இல்லாமல் அலைச்சல் இதை  விட சிறந்த மருந்துகளை வீட்டிலேயே வைத்துக்கொண்டு ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்...???

இதற்க்கு நிறைய மருந்துகள் இருக்கு,ஆனால் அது எல்லாம் கிடைக்க நம்ம நாடு இல்லையே.இங்க கிடைக்கிறதா வச்சுதான் வைத்தியம் செய்யணும்

பொதுவாக இங்குள்ள மலையாளிகளின் ஹோட்டல்களில் சென்றால் அங்கு இரண்டு விதமான குடிநீர் கிடைக்குமொன்று சாதாரண குடிநீர்,மற்றது சீரகம் போட்டு கொதிக்க வைத்த சுடுநீர்.
நம்ம ஆட்கள் இந்த தண்ணீரை அதிகம் விரும்புவதில்லைஆனால் மலையாளிகள் அதைதான் விரும்பி குடிப்பார்கள்.சீரகம் இடாமல் வெறும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலே பாதி பிரச்சினை ஓவர்.

இணையத்துல மருந்து தேடினால் சுக்கு,திப்பிலி,அது இதுன்னு மருந்தெல்லாம் சொல்லுது.அதெல்லாம் இங்க கிடைக்குமா? வேற என்னதான் வழி?

அதாவது குளிர்காலம் ஆரம்பிச்சதும் அடிக்கடி இரவுல பாலில் சிறிது மஞ்சள்,மிளகு தூள் போட்டு நல்லா காய்ச்சி குடிக்கணும்.தினமும் இல்லனாலும் ரெண்டு,மூணு நாளைக்கு ஒரு தடவையாவது இப்படி குடிக்கலாம்.

இங்கு எல்லா கடைலயும் சுக்கு காப்பி பவுடர் கிடைக்குது. எல்லாம்  மேட்  இன் கேரளா தான்.அதை வாங்கி வச்சுகிட்டு அடிக்கடி குடிக்க்கலாம். பொதுவா குளிர்காலத்துல இங்க டீ ,காப்பி, அதுவும் பிளாக் டீ அடிக்கடி குடிக்க தோணும். அப்போல்லாம் இந்த சுக்கு காப்பிய குடிக்கலாம்.
சளி இருக்கும் போது  மிளகை ஒரு ஊசியில் குத்தி நெருப்பில் சுட்டு அந்த புகையை மூக்கில் இழுக்கணும்.இது ரொம்ப கஷ்டம்.


ஜலதோஷம் வரதுக்கு முன்னாடியே இந்த மாதிரி எல்லாம் முன்னெச்சரிக்கையா இருந்தா  குளிர்காலம் முழுக்க எந்த பிரச்சினையும் இல்ல. என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஜலதோஷம்,சளி வந்தாலே குறைந்தது 10 நாளைக்காவது நம்மை பாடாய் படுத்தி வைக்கும். குறிப்பா மூக்கில் நீர் வடிதல் இருக்கே அது ரொம்ப தொல்லை.பொது இடங்கள்ல போகும் பொது ரொம்ப சிரமமா இருக்கும் இதைவிட மேலே சொன்ன மாதிரி அடிக்கடி செஞ்சா  இந்த தொல்லைகள் வராமலே இருக்கும்.


நான் எப்பவுமே குளிர்காலம் வந்தாலே மேலே சொன்ன மாதிரிதான் சுடுதண்ணி,சுக்கு காப்பி,மிளகு மஞ்சள் பால் எல்லாம் அடிக்கடி சாப்பிடுவேன்.எந்த தொல்லையும் இல்ல.நீங்களும் இந்த வழிய பின்பற்றி பாருங்களேன்.இது இயற்கையானது தானே.இதை தவிர இன்னும் ஏராளமான வீட்டு மருந்துகள் இருக்கு.ஆனால் அதெல்லாம் நாம இருக்குற இந்த அரபு நாட்டுல கிடைக்கணுமே.கிடைக்குறத பயன்படுத்திக்கலாம்.





5/10/12

உடல் எடை கூட என்ன செய்ய வேண்டும்...(HOW TO GAIN WEIGHT)



இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும், என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றிப் பாருங்களேன்...

நானும் இப்படிதான்.சிறுவயது முதலே உடல் மெலிவாகத்தான் இருப்பேன் எவ்வளவு  சாப்பிட்டாலும் உடல் ஒரே அளவில் தன இருககும் 30 வயது ஆகியும் உடல் எடை 60 கிலோதான்.அதுவும் வெளிநாட்டுக்கு வந்து கடந்த 10 ஆண்டுகளில் உடல் எடை போடாத ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.அதற்க்கு காரணம் நானும் அதிக அளவு சாப்பிட மாட்டேன்.வீட்டில் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் எனக்கும் வந்து விடுமோ என்று பயம்.

ஆனால் சமூகத்தில் உடல் அமைப்பும் ஒரு மரியாதையை ஏற்படுத்தும் என்பதை நான் பல இடங்களில் கண்டு இருக்கிறேன் எனவே உடல் எடையை கூட்ட என்ன செய்யலாம் என்று பல வழிகளிலும் முயற்சி செய்து இணையத்தில் தேடிய போது பல தகவல்கள் கொட்டிக்கிடப்பதை அப்படியே இந்த பதிவில் எழுதலாம் என்று நினைத்தேன்.எழுதுவதோடு மட்டும் அல்ல நானும் இதை பின்பற்றலாம் என்று இருக்கிறேன்.

உடலின் உயரமும் இருக்க வேண்டிய எடையும் அட்டவணை 
           
                               Height                         Men                   Women
                           (Feet & Meters)       Weight in kgs          Weight in kgs
   
                            5'-0"   (152.3 cm)       50.8 - 54.4            50.8 - 54.4

                            5'-1"  (154.8 cm)        51.7 - 55.3            51.7 - 55.3

                            5'-2"  (157.4 cm)        56.3 - 60.3            53.1 - 56.7

                            5'-3"  (159.9 cm)        57.6 - 61.7            54.4 - 58.1

                            5'-4"  (162.4 cm)        58.9 - 63.5            56.3 - 59.9

                            5'-5"  (165.0 cm)        60.8 - 65.3            57.6 - 61.2

                            5'-6"  (167.5 cm)        62.2 - 66.7            58.9 - 63.5

                            5'-7"  (170.0 cm)        64.0 - 68.5            60.8 - 65.3

                            5'-8"  (172.6 cm)        65.8 - 70.8            62.2 - 66.7

                            5'-9"  (175.1 cm)         67.6 - 72.6            64.0 - 68.5

                            5'-10" (177.7 cm)        69.4 - 74.4            65.8 - 70.3

                            5'-11" (180.2 cm)        71.2 - 76.2            67.1 - 71.7

                            6'-0"  (182.7 cm)         73.0 - 78.5            68.5 - 73.9

                            6'-1"  (185.3 cm)         73.3 - 80.7            73.3 - 80.7

                            6'-2"  (187.8 cm)         77.6 - 83.5            77.6 - 83.5

                            6'-3"  (190.4 cm)        79.8 - 85.9             79.8 - 85.

உறவினர் ஒருவர் உடல் எடை கூட புரோட்டீன் பவுடர் வாங்கி சாப்பிடால்ம் என்று சொன்னார்.நான் விசாரித்ததில் அது மிகவும் ஆபத்தான பொருள் என்று தெரிகிறது.
தகுந்த ஆலோசனையுடன் உண்பதும்,தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் வேண்டும்.
இல்லை என்றால் இது போன்ற பவுடர்கள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.இயற்கையான முறையில் உணவுகளாலேயே உடல் எடைய கூட்டவும் குறைக்கவும் முடியும்.

உடல் எடை கூட என்னென்ன சாப்பிடலாம்...???

ஒரு நாளைக்கு 3முறை சாப்பிடுவதை ஆறு முறையாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.இடையில் பழங்கள்,குளிர்பானங்கள் சாப்பிட வேண்டும்.
பேரிச்சம் பழம்,தேன் இவற்றை பாலுடன் கலந்து தினமும் சாப்பிடலாம்.
உலர் திராட்சையில் அதிக அளவு சர்க்கரை சத்து உள்ளது. காலை நேரத்தில் சிற்றுண்டியாக பாலுடன் ஓட்ஸ்,உலர் திராட்சை கலந்து கஞ்சி வைத்து சாப்பிடலாம். 

புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், டோஃபு போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.

ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும். மேலும் உடலுக்கு தினமும் குறைந்தது 40% கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது, அதற்கு இந்த உணவுகளை உண்டால், விரைவில் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழங்களை சாப்பிடுவதும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில் கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன.


உடல் எடையை அதிகரிப்பதில் கலோரியின் பங்குதான் அதிகம், கலோரி அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடுங்கள் உதாரணத்திற்கு நிலக்கடலை,மீன் எண்ணெய்,சோயா,சாக்லேட் வகைகள்.

இப்படி எல்லாம் சாப்பிட்டு உடலை பெருக்க வைப்பது முக்கியம் இல்லை.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு போல தேவையான அளவு உடல் பெருத்ததும்.அதற்கு பிறகு எளிமையான உடற்பயிர்ச்சிகள் செய்து கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.

தற்பொழுது நானும் உடல் எடையை கூட்ட முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.இந்த முயற்சி வெற்றி பெரும் போது கண்டிப்பாக அதையும் பதிவிடுவேன்.இது எனது முதல் பதிவு.இனி வரும் பதிவுகளும் எனக்கு பிடித்த என்னை பாதித்த விஷயங்களை பற்றிதான் இருக்கும்.என் பதிவுகள் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டமிட்டு செல்லுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.