16/10/12

குளிர்காலமும் கூட வரும் ச(ளி)னியும்...பாதுக்காப்பது எப்படி...???

மத்தியக்கிழக்கு அரபு நாடுகளில் இந்த மாதத்தோடு கடும் வெயில் முடிந்து கடும் குளிர் காலம் வரப்போவதால் இந்த நேரத்தில் இங்குள்ள நம்மை போன்றவர்களுக்கு வரும் முக்கியமான பிரச்சினை சளி,ஜலதோஷம்,மூக்கடைப்பு,தொண்டை வலி,மூக்கில் நீர் வடிதல் போன்றவைதான்.சிலருக்கு காய்ச்சல் கூட வந்து பாடாய் படுத்தும்.


குளிர் காலம் வந்தாலே இங்குள்ள மருத்துவமனைகளை 24 மணி நேரமும் இது போன்ற பிரச்சினைகளுக்கு தான் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆரம்பத்தில் நானும் இப்படித்தானானால் எந்த மருந்து மாத்திரைக்கும் இது முழுமையாக குணமாவது இல்லை.தற்காலிக நிவாரணம்தான்.

தேவை இல்லாமல் அலைச்சல் இதை  விட சிறந்த மருந்துகளை வீட்டிலேயே வைத்துக்கொண்டு ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்...???

இதற்க்கு நிறைய மருந்துகள் இருக்கு,ஆனால் அது எல்லாம் கிடைக்க நம்ம நாடு இல்லையே.இங்க கிடைக்கிறதா வச்சுதான் வைத்தியம் செய்யணும்

பொதுவாக இங்குள்ள மலையாளிகளின் ஹோட்டல்களில் சென்றால் அங்கு இரண்டு விதமான குடிநீர் கிடைக்குமொன்று சாதாரண குடிநீர்,மற்றது சீரகம் போட்டு கொதிக்க வைத்த சுடுநீர்.
நம்ம ஆட்கள் இந்த தண்ணீரை அதிகம் விரும்புவதில்லைஆனால் மலையாளிகள் அதைதான் விரும்பி குடிப்பார்கள்.சீரகம் இடாமல் வெறும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலே பாதி பிரச்சினை ஓவர்.

இணையத்துல மருந்து தேடினால் சுக்கு,திப்பிலி,அது இதுன்னு மருந்தெல்லாம் சொல்லுது.அதெல்லாம் இங்க கிடைக்குமா? வேற என்னதான் வழி?

அதாவது குளிர்காலம் ஆரம்பிச்சதும் அடிக்கடி இரவுல பாலில் சிறிது மஞ்சள்,மிளகு தூள் போட்டு நல்லா காய்ச்சி குடிக்கணும்.தினமும் இல்லனாலும் ரெண்டு,மூணு நாளைக்கு ஒரு தடவையாவது இப்படி குடிக்கலாம்.

இங்கு எல்லா கடைலயும் சுக்கு காப்பி பவுடர் கிடைக்குது. எல்லாம்  மேட்  இன் கேரளா தான்.அதை வாங்கி வச்சுகிட்டு அடிக்கடி குடிக்க்கலாம். பொதுவா குளிர்காலத்துல இங்க டீ ,காப்பி, அதுவும் பிளாக் டீ அடிக்கடி குடிக்க தோணும். அப்போல்லாம் இந்த சுக்கு காப்பிய குடிக்கலாம்.
சளி இருக்கும் போது  மிளகை ஒரு ஊசியில் குத்தி நெருப்பில் சுட்டு அந்த புகையை மூக்கில் இழுக்கணும்.இது ரொம்ப கஷ்டம்.


ஜலதோஷம் வரதுக்கு முன்னாடியே இந்த மாதிரி எல்லாம் முன்னெச்சரிக்கையா இருந்தா  குளிர்காலம் முழுக்க எந்த பிரச்சினையும் இல்ல. என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஜலதோஷம்,சளி வந்தாலே குறைந்தது 10 நாளைக்காவது நம்மை பாடாய் படுத்தி வைக்கும். குறிப்பா மூக்கில் நீர் வடிதல் இருக்கே அது ரொம்ப தொல்லை.பொது இடங்கள்ல போகும் பொது ரொம்ப சிரமமா இருக்கும் இதைவிட மேலே சொன்ன மாதிரி அடிக்கடி செஞ்சா  இந்த தொல்லைகள் வராமலே இருக்கும்.


நான் எப்பவுமே குளிர்காலம் வந்தாலே மேலே சொன்ன மாதிரிதான் சுடுதண்ணி,சுக்கு காப்பி,மிளகு மஞ்சள் பால் எல்லாம் அடிக்கடி சாப்பிடுவேன்.எந்த தொல்லையும் இல்ல.நீங்களும் இந்த வழிய பின்பற்றி பாருங்களேன்.இது இயற்கையானது தானே.இதை தவிர இன்னும் ஏராளமான வீட்டு மருந்துகள் இருக்கு.ஆனால் அதெல்லாம் நாம இருக்குற இந்த அரபு நாட்டுல கிடைக்கணுமே.கிடைக்குறத பயன்படுத்திக்கலாம்.





1 கருத்து: